இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 


சுகாதார அமைச்சுக்கு அறிவிக்காமல் இரகசியமாக வெளிநாடுகளுக்குச் சென்ற வைத்தியர்களின் பெயர்கள் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை இரத்து செய்யுமாறு வைத்திய சபை கோரிய போதிலும் இதுவரையில் அவ்வாறு செய்யப்படவில்லை எனவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றன.
கடந்த ஒன்றரை வருடங்களில் விசேட பயிற்சி பெற்று வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பிய சுமார் 120 வைத்தியர்கள் சேவை ஒப்பந்தங்களை மீறி சட்டவிரோதமான முறையில் மீண்டும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த வைத்தியர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் சில விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்காமல் வெளிநாடு செல்லும் வைத்தியர்களிடம் இருந்து 15 மில்லியன் ரூபா இலஞ்சமாக அறவிடப்பட்டாலும், அந்த தொகையை அறவிடுவதற்கு அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அதற்கு பதிலாக 2 மில்லியனை மாத்திரமே வசூலிக்கும் பணியை மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் தெரிவித்தார்.
எனினும் கடந்த ஒன்றரை வருடத்தில் இவ்வாறு வந்த 363 வைத்தியர்களில் 120 பேர் எவ்வித தகவலையும் தெரிவிக்காமல் சட்டவிரோதமாக வெளிநாடு திரும்பியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.