ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்றும் ஒருதரப்பினர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

 

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான பேச்சுகள் கடந்த சில வாரங்களாக தீவிரமடைந்துள்ளதால் ஸ்ரீலன்கா பொதுஜன பெரமுனவுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
வேட்பாளர் யார் என்ற கோணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் பனிபோர் காரணமாக பல்வேறு பிளவுகளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ளன.
ஒரு குழு பசில் ராஜபக்சவின் பெயரையும், மற்றொரு குழு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பெயரையும் முன்மொழிந்துள்ளது.
எனினும் 22, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமெரிக்க குடியுரிமையை நீக்குவதற்கு பசில் ராஜபக்ஷ தயக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன் காரணமாக அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என கட்சியின் குழுவொன்று போர்க்கொடி உயர்த்திள்ளது.
நாமல் ராஜபக்ச இது தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை. அவர் எதிர்க்கட்சிக்கு சென்று எதிர்க்கட்சி பணியை செய்வதையே விரும்புவதாக பொதுஜன பெரமுனவின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால் கூட்டணியை அமைக்கும் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளதுடன், புதிய கூட்டணிகளும் உருவாகி வருகின்றன.
தற்போதைய
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நியமிக்க வேண்டுமென்றும் ஒருதரப்பினர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பில் பலர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் சஜித் பிரேமதாசவும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அநுரகுமார திஸாநாயக்க களமிறங்குவதை உறுதிசெய்துள்ளனர்.