மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆரம்பமாவதையிட்டு மட்டக்களப்பு மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

 


கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 07ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில்
இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபையினால் மாபெரும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் என்.சிவலிங்கத்தின் ஆலோசனையின் கீழ் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜா தலைமையில்
சிரமதான பணிகள் இடம்பெற்றன.
இன்று காலை முதல் நண்பகல் வரையில் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகம் சிரமதானம் செய்யப்பட்டது.
நாட்டில் நிலவும் டெங்கின் தாக்கம் அதிகமான நிலையில் காணப்படுவதன் காரணமாக ஆலய வளாகத்தில் நுளம்பு பெருகுவதற்கு ஏதுவான இடங்களும்
அழிக்கப்பட்டன.
மாநகரசபையின் ஊழியர்கள்,உத்தியோகத்தர்கள் என பெருமளவானோர் இந்த சிரமதான பணியில் பங்கேற்றனர்.
ஆலயத்திற்கு வருகைதரும் பக்தர்கள் ஆலய சூழலை அழகாகப் பேணும் வகையில் கழிவுகளை அகற்றுமாறும் மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராஜாவினால்
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.