சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும், அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும்.
இதையடுத்து மேலும் இரண்டு சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறது என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.