சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை

 


நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக பட்டம் பறக்கவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை பொருட்படுத்தாமல் யாரேனும் ஒருவர் செயல்பட்டால், அவ்வாறானவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.