உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் முறையான ஆய்வுகள் இன்றி சந்தைக்கு வெளியிடப்படுவதாக நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், , நுகர்வோர் சட்டத்திற்கு ஏற்ப வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்காவிட்டால், எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து, விலையை காட்சிப்படுத்தாத கடை உரிமையாளர்களை நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.