தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும்- மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க

 


நாட்டின் உண்மையான பொருளாதாரத்தின் மீது நிதிக் கொள்கையின் பரிமாற்றம் இதுவரை சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் வட்டி வீதங்கள் மேலும் குறைய வேண்டும் என நேற்று (07) இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மத்திய வங்கியின் ஆளுநர், வீழ்ச்சியடைந்துள்ள பணவீக்க வீதத்திற்கு ஏற்ப கொள்கை வீதங்களை மேலும் தளர்த்துவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.