மின் கட்டண அதிகரிப்பு இல்லை

 


மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட வில்லை என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

06 மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வருடத்துக்கு இரு முறை மின் கட்டணத்தை திருத்தப்படும் என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ தெரிவித்துள்ளாா்.

மின் கட்டணத்தை திருத்துவதற்கான யோசனை மின்சார சபையினால முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர்களின் சங்கம் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் இந்த வருடத்தில் மீண்டும் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது என்று பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளாா்