ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு அங்கீகாரம் பெறப்படும்

 

 


ஓய்வுபெற்ற மற்றும் சேவையில் இருந்து விலகிய ஆசிரியர்களை மாகாண பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன பாராளுமன்றத்தில்  (11) எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான நிதி மாகாண சபைகளில் உள்ளதால் அந்த குழுவை இணைத்துக் கொள்ள முடியும் எனவும் அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் மாகாண சபைகளுக்கு அறிவிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேர்ப்புகளை மேற்கொண்டால் ஆசிரியர் பற்றாக்குறை ஓரளவு தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.