வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் இஸ்லாமிய குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் ஓகஸ்ட் 4ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ
விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர்
அப்துல்லாஹியான்தெரிவித்துள்ளார்
இந்த விஜயத்தின் போது, அமைச்சர் ஈரான் ஜனாதிபதி டாக்டர் செயிட் இப்ராஹிம் ரைசியையும் சந்திக்க உள்ளார், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும்.