அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

 


அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபா 05 சதமாகவும், விற்பனை பெறுமதி 328 ரூபா 57 சதமாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி கடந்த வாரம் இறுதியாக வெளியிட்ட நாணய மாற்று விகிதத்துக்கு அமைய, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 312 ரூபா 55 சதமாகவும், விற்பனை பெறுமதி 326 ரூபா 65 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.