கடந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதியில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அந்த காலப்பகுதியில், 181 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியுள்ளனர், இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 39 வீத அதிகரிப்பு என தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பதிவாகியுள்ள 181 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களில் 26 ஆண்களும் 3 பெண்களும் 15-24 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.