நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை- இலங்கை மத்திய வங்கி

 


நாட்டின் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறையவில்லை என இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அதிகரித்து டொலரின் பெறுமதி தற்போது வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. எனினும் பொருட்கள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்தாண்டில் ரூபாயின் பெறுமதி 19 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், அவ்வப்போது எரிபொருள் விலை குறைக்கப்படுவதால் அதன் பயனை நுகர்வோர் பெற மாட்டார்கள் என மத்திய வங்கி வலியுறுத்துகிறது.