அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது

 

 


அடுத்த வருடம் அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகள் எதுவும் நடைபெறாது என்பதால் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட மாட்டாது என பொது திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளைத் தயாரிப்பது தொடர்பான தொடர் வழிகாட்டுதல்களை வெளியிட்டு, இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் திகதி முதல் ஊழியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பிற கொடுப்பனவு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.