அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
அவ்வாறு கடத்தப்பட்ட அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரை, 10 நாட்கள் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கம்பளை பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகளில் மாறி, மாறி தடுத்து வைத்தே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம்
தொடர்பில் தகவல் கிடைத்ததும் விரைந்து செயற்பட்ட கம்பளை விசேட அதிரடிப்
படையினர், அவ்விரு வீடுகளையும் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த நபரை
மீட்டுள்ளனர்.
அத்துடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்றக் குற்றச்சாட்டின் பேரில், நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடத்தப்பட்டு, அடைத்து வைக்கப்பட்டிருந்த கண்டி, அக்குறனை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மொஹமட் ஹாசிம் என்பவரே மீட்கப்பட்டுள்ளார்.
அவரை சிறைப்பிடித்து வைத்திருந்ததாகக் கூறப்படும் மர ஆலை உரிமையாளரும் கைது செய்யப்பட்டவர்கள் அடக்குகிறார்.