கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது .

 


 யாழில்  கைதிக்கு தொலைபேசி வழங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளை பரிசோதனை செய்த போது, அந்த சிறைச்சாலை உத்தியோகத்தர்  கைதிக்கு தொலைபேசி வழங்கியமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு சிறைச்சாலை அதிகாரியினால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணம் பொலிஸார் அந்த உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.