எந்த
சமூகமாக இருப்பினும் சட்டவிரோதமாக காணிக் கொள்ளைகளில் ஈடுபடுவது குற்றம்
குற்றமே. வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை
பிரித்து தங்கள் சுய தேவைகளை மறைமுகமாக பெறுகின்றனர். என பாராளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நாவலடிப்பகுதியில் (கொழும்பு
வீதியில்) அத்துமீறி சட்டவிரோதமாக பிடிக்கப்படும் காணிகள் தொடர்பான
விடயங்களை ஆராயவும் தடுக்கவும் திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர்
மேலும் தெரிவிக்கையில்,
நாவலடி பிரதேசத்தில் பாரியளவில் சட்ட விரோத காணிக் கொள்ளை இடம்பெறுவது
கையும் களவுமாக பிடிபட்டதுடன் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது இவ் கொள்ளைகள்
தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்.
எந்த சமூகத்தினர் ஆயினும் சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் ஈடுபடுவது குற்றம்
குற்றமே. இவற்றுக்கு பின்னால் அரச சார் பாராளுமன்ற உறுப்பினர்களும்,
அமைச்சர்களும் தரகுப் பணத்துக்காகவும் தங்களது கட்சியின் தங்களை
சார்ந்தவர்களின் சுய நலனுக்காகவும் இவ் காணிகள் ஆனது சட்டவிரோதமான முறையில்
அபகரிக்கப்பட்டு வருக்கின்றது.
வெளியில் பிரதேசவாதம், சமூகவாதம், இனவாதம் கதைத்து மக்களை தங்களது சுய
இலாபங்களுக்காக பிரித்து வைத்து தங்களின் சுய தேவைகளை இவர்கள் மறைமுகமாக
ஒற்றுமையாக செயல்ப்பட்டு இவ்வாறான சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு
வருகின்றார்கள்.
இவ்வாறான செயல்பாடுகளை தடுக்க வேண்டியவர்களே இவ்வாறான சட்ட விரோத
செயல்பாடுகளில் ஈடுபடுவது அதற்குரிய ஆதரவினை வழங்குவது அனைத்து இன மக்களின்
எதிர்கால சந்ததியினரின் இருப்புக்களை கேள்விக்குறியாக்குதற்கு
சமமானதாகும்.
புளுட்டுமானோடை சட்ட விரோத காணி அபகரிப்பானது ஓர் பக்கம் பாரியளவில் நடந்து
வரும் அதே வேளை அதற்கு ஈடாக இங்கும் போட்டி போட்டுக்கொண்டு இங்கும் நடந்து
வருகின்றது. இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட
வேண்டும் எவ் சமூகம் சட்டவிரோதமாக செயல்படினும் குற்றம் குற்றமே.
இவற்றுக்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும். என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.