மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


கடும் வெப்பம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலப்பரப்பில் அமைந்துள்ள போரதீவுப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், வெல்லாவெளி, பழுகாமம், உள்ளிட்ட பல இடங்களிலும் அமைந்துள்ள சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளது.

அதிக வெப்பம் காரணமாக சிறிய குளங்கள் முற்றாக வற்றியுள்ளதால், அப்பகுதியிலுள்ள கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலையும் ஏற்பட்டுள்ளது.