அவசர மருந்து கொள்வனவுகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

 


அவசர மருந்து கொள்வனவுகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரம் அவசர கொள்வனவுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபையின் பணிப்பாளர் சபைக்குள் இருந்த பிரச்சினைகள் தற்போது முற்றாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.