நம் அன்றாட வாழ்க்கையில் இதுவரை பல வகையான மார்கெட்டுகளை பார்த்திருப்போம், கேள்வியும்பட்டிருப்போம். ஆடை சந்தைகள், காய்கறி சந்தைகள், செல்லப்பிராணி சந்தைகள், தானிய சந்தை என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் இதுவரை நீங்கள் மணமகள் சந்தை என்ற ஒன்றை கேள்விப்பட்டதுண்டா? இப்படி ஒரு சந்தையா என நீங்கள் நினைக்கலாம், பெண்களை விற்பது இந்த காலத்தில் அனுமதிக்கப்படுகிறதா? என்ற கேள்வி உங்களுக்குள் எழும், இதெற்கெல்லாம் பதில் ஆம் என்பதுதான்.
பல்கேரியா நாட்டில் தான் அந்த மணமகள் சந்தை உள்ளது. இந்த சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கும் ஒரு விஷயம். இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்.
இந்த சந்தையானது அந்நாட்டில் அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. திருமணம் என்றாலே எக்கச்சக்க செலவாகும், அந்த செல்வுகளை செய்ய இயலாத பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர். அங்கு ஆண்கள் தங்களுக்கு பிடித்த பெண்களை தகுந்த விலை கொடுத்து வாங்கி மனைவியாக ஏற்று வாழத் தொடங்குகின்றனர்.
சந்தையில் விற்கப்படும் மணமகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு பல நிபந்தனைகள் வைக்கப்படுகின்றன. கலையடி சமூகத்தினர் தங்களின் மகள்களை இந்த சந்தையில் விற்கின்றனர்.