மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப்பின் பங்குபற்றுதலுடன் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அகிலா கணகசூரியம், மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. சுஜதா குலேந்திரகுமார் ஆகியோர் முன்னிலையில் புதிய அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் இன்று (25) தனது கடமைகளைப் பொறுப்பேற்றரர்.
இதன்போது சென் மிக்கோல் கல்லூரியின் நிறுவாகப் பொறுப்புகளை அதன் அதிபராக கடமைவகித்த இலங்கை கல்வி நிறுவாக சேவை உத்தியோகத்தர் ஆர்.ஜே. பிரபாகரன் புதிய அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப்பிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்வி அதிகாரி, SDEC செயலாளர், SDEC உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.