சுகாதாரத் துறையின் தேவைகளை கருத்தில் கொண்டுஓய்வு பெற்ற விஷேட வைத்தியர்கள் மீண்டும் பணியில் அமர்த்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும் இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வைத்தியர்கள் மீண்டும் சேவைக்கு திரும்புவார்களாயின் அவர்களுக்கு தேவையான சகல வசதிகளையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தூரப்பிரதேசங்களில் பணியாற்றும் வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலம் வைத்தியசாலைகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.