இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு.

 


இலங்கையின் பிரபல வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

பலவருடங்களாக நான் இலங்கையின் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செய்துள்ளேன், எனக்கு தற்போது 45 வயது ஆசியாவில் வேறு எந்த பெண் வீராங்கனையும் இவ்வளவு காலம் வலைபந்தாட்டத்தில் ஈடுபட்டதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 உலககிண்ணப்போட்டிகளின் பின்னர் நான் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற தீர்மானித்துள்ளேன் என அவர்தெரிவித்துள்ளார்.