மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. ஆதம்லேப்பை ஏற்பாட்டில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
கொழும்பு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் சோல்வ் பவுண்டேசன் (Solve Foundation ) அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பாசறையின் பிரதான பயிற்றுனராக அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தின் பயிற்றுனர் பஞ்சரத்தினம் தம்பு செயற்பட்டார்.
கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட, நீச்சல் பயிற்றுவிப்பாளர்கள், உயிர்க்காப்பு நீச்சல் கற்கை நெறியை நிறைவு செய்தவர்கள் மற்றும் நீச்சல் வீரர்கள் போன்றோருக்கு நீச்சல் தொழில் நுட்பங்கள் மற்றும் பயிற்சிகள் தொடர்பாக இதன் போது வளவாளரினால் பயிற்றுவிக்கப்பட்டது.
பயிற்றுவிப்பில் கலந்து கொண்ட பயிற்றுனர்கள் மற்றும் நீச்சல் வீரர்களுக்கு பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன்,விளையாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பல அதிகாரிகள் பங்கேற்றனர்.
சிறந்த நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கு இப்பயிற்சிகள் உதவுவதுடன் எதிர் காலத்திலும் இவ்வாறான பயிற்சிகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.