மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தினால் 40 வயதிற்கு மேற்பட்ட பிறப்பு சான்றிதழ் அற்றோருக்கான அடையாள அட்டையினை பெற்றுக்கொடுக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிறப்பு சான்றிதழ் இல்லாமையினால் இதுவரை தேசிய அடையாள அட்டை பெற்றுக்கொள்ளாதவர்கள் தொடர்பில் ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2023.12.31ம் திகதியை இறுதி தினமாக கொண்ட சுற்றறிக்கைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவையில் நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இரண்டு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நடமாடும் சேவை முதலாம் கட்டமாக 09.08.2023 ஆம் திகதி இன்று மாங்காடு சமுர்த்தி வலயத்திற்கும், இன்று 11.08.2023ஆம் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட கல்லாறு மற்றும் எருவில் சமுர்த்தி வலயங்களுக்குமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.