சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் 14 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இந்த குழு இலங்கையில் தங்கியிருக்கும்.
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள விரிவாக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான முதல் மீளாய்வுக்காக இக்குழு இலங்கை வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.