கடலில் நீராடச் சென்ற நபர் ஒருவர் சுழியில் சிக்கி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (30) மாலை ஹபராதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கல கடலுவா பாலம், முகத்துவாரத்துக்கு அருகில், கடலில் நீராடச் சென்ற குழுவொன்றில் மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனையடுத்து, அவர்களில் இருவர் மீட்கப்பட்டதுடன், மற்றைய நபர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.
உடவலவ பிரதேசத்தில் இருந்து சுற்றுலாவுக்கு வந்தவர்களில் மூவரே இவ்வாறு நீர்வீழ்ச்சியில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் களுகல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் முன்னெடுத்துள்ளதுடன், ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.