சந்தையில் மீன் விலை குறைந்துள்ளதா ?

 


காலநிலை மாற்றம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வேகமாக அதிகரித்து வந்த மீன் விலை தற்போது வெகுவாக குறைந்துள்ளதாக மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.பி.உபுல் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கெலவல்ல மீனின் விலை 2200 ரூபாவிற்கும், ஏனைய அனைத்து வகை மீன்களும் 1000 ரூபாவிற்கும் அதிகமாக இருந்தது.

இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட்டதாகவும் இருந்ததாகவும் தற்போது மீன் விலை குறைந்துள்ளதாகவும் தலைவர் மேலும் தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோர் பெருமளவு நிவாரணம் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.