மின் வெட்டு அமுல்படுத்தப்படுமா ?

 


தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

குறிப்பிட்ட சில நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிக்கும்போது அது மின் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு நீரை விடுவிப்பதன் மூலம் மின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் நாட்டில் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை தோன்றும் சாத்தியம் இருப்பதால் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி என்ற இரண்டு விடயங்களும் பாதிக்காத வகையில் இந்த சிக்கலைத் தீர்க்க முயற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இது குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அங்கு மின்சாரத்தை துண்டிக்காத வேலைத்திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.