ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும்- சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்

 


ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, பிளாஸ்டிக் மாலைகள், ஒருமுறை பயன்படுத்தும் கரண்டிகள், முள்கரண்டிகள், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் கரண்டிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரோக்கள், பிளாஸ்டிக் இடியப்பத் தட்டுகள் ஆகியனவற்றுக்கு இந்த தடை விதிக்கப்படவுள்ளது.