யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
22 வயதுடைய குறித்த மாணவி நேற்று (03) பிற்பகல் கலட்டி பகுதியில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், மன்னாரைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் முறிவு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரவி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.