கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் இன்று(08) விசேடக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன.