பதினான்கு வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய் கைது செய்யப்பட்டதாக திவுலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சிறுமியின் தந்தை உயிரிழந்துள்ளதுடன் சந்தேக நபரான தாய்க்கு நான்கு பிள்ளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒருவரிடம் இருந்து 2000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு தனது மகளை வீட்டில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்க இடமளித்ததாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சிறுமி 10ஆம் ஆண்டு படித்து வருவதாகவும், இந்த சட்டவிரோத செயலை பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் சிறுமி நடந்த சம்பவத்தை ஆசிரியை ஒருவரிடம் கூறியுள்ளார்.
சிறுமியை பல மாதங்களாக தாய் பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளதாக சிறுமி பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்ய திவுலபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்