இந்தோனேசியாவில் ஹிஜாப்பை சரியாக அணியவில்லை என கூறி மாணவிகளின் தலையை ஆசிரியர் மொட்டை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லமொங்கனின் கிழக்கு ஜாவா நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாடசாலை ஒன்றில் ஹிஜாப் சரிவர அணியாத 14 இஸ்லாமிய மாணவிகளின் தலையின் ஒரு பகுதியை ஆசிரியர் ஒருவர் மொட்டை அடித்துள்ளார்.
அடையாளம் காணப்படாத அந்த ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், நடந்த சம்பவத்திற்கு குறித்த பாடசாலை மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் தலைமை ஆசிரியர் ஹர்டோ கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையில் குறித்த ஆசிரியரை நிரந்தரமாக பணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்துள்ளது.