மட்டக்களப்பில் நடைபெற்ற பறங்கியர் கலாசார நிகழ்வு!

















(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மண்முனை வடக்குப் பிரதேச செயலகமும், பறங்கியர் கலாசார மன்றமும் இணைந்து நடத்திய பறங்கியர் கலாசார நிகழ்வு நேற்று சனிக்கிழமை (19) மட்டக்களப்பு அருணோதயம் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்குப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் வளர்மதி ராஜ் வரவேற்புரையாற்ற ஆரம்பமான இந்நிகழ்வில், கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ச.நவநீதன்  பிரதம விருந்தினராகவும், மட்டக்களப்பு மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன் மற்றும் மட்டக்களப்பு வெட்டுக்காடு கிராமசேவை உத்தியோகத்தர் யு.தனோஜிதா ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பறங்கியர்களின் தனித்துவம், மொழி மற்றும் கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் வகையிலான பாடல்கள், நடனம் என்பன ஆற்றுகை செய்யப்பட்டன.