லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும்

 


பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான சுற்றறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பஸ்கள் இறக்குமதிக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.