பட்டிருப்புப் பாலமூடாகப் போக்குவரத்துச் செய்வதில் மக்கள் அவதி!












(கல்லடி செய்தியாளர்)


படுவான்கரையையும் எழுவான்கரையையும் இணைக்கும் முக்கிய பாலங்களில் ஒன்றாகக் காணப்படும் பட்டிருப்புப் பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது.

இதனால் இப்பாலத்தினூடாக வாகனங்களில் பயணிப்போர் பல்வேறு கஸ்டத்தினை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை இப்பாலத்திலிருந்து பெரியபோரதீவுச் சந்தி வரையிலான பிரதான வீதி குன்றும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதனால் இப்பாதையூடான போக்குவரத்தில் தாம் இன்னல்களை அனுபவித்து வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

எனவே இந்நிலைமையினைச் சீர்செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டுமென பொதுமக்கள் மற்றும் அரசதுறை ஊழியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.