(கல்லடி செய்தியாளர்)
கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத் தேரோட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது பக்தர்கள் அரோகரா கோசம் எழுப்ப, மேள வாத்தியங்கள் முழங்க, ஆண் மற்றும் பெண் அடியார்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க மாமாங்கேஸ்வரர் தேரிலேறி அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.
இத்தேரோட்டத்தைக் காண நாட்டின் நாலா பக்கங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்திருந்ததைக் காண முடிந்தது.