வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் ஒன் லைன் மூலமாக வாக்களிப்பை பதிவு செய்ய முடியும் .

 


வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் முறைமையொன்றை தயாரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், பாராளுமன்றம் வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய பொறிமுறையொன்றைத் தயாரிக்கத் தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அத்துடன், ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக வாக்களிப்பை பதிவு செய்யும் முறைமை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களும் இதன் ஊடாக வாக்களிப்பில் பதிவு செய்ய முடியும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதன்படி, சபாநாயகருடன் கலந்தாலோசித்து இதற்கான அமைப்பை தயாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.