ஒரு இலட்சம் வேலை வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 135 பேருக்கு திங்கட்கிழமை (28) திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் வைத்து நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்த நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.