அரச வைத்தியசாலை ஆய்வுக்கூட வைத்திய சேவையுடன் தொடர்புடைய ஐந்து தொழில் பிரிவுகளைச் சேர்ந்த சுகாதார பணியாளர்கள் இன்று (24) அடையாள வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஏழு கோரிக்கைகளை முன்வைத்தே இந்த வேலை நிறுத்தத்தை முன்னெடுத்துள்ளதுடன், இதன் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிகளும் முடங்கியுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் எக்ஸ்ரே பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. பரிசோதனை, சகல இரசாயன பரிசோதனைகள், வெளிநோயாளர் மருந்தகம் மற்றும் கிளினிக் மருந்தகம் என்பன முடங்கியுள்ளதுடன், வெளிநோயாளர் பிரிவு மற்றும் கிளினிக் பிரிவு போன்றவற்றில் வைத்தியர்கள் கடமையில் ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.