தற்போது நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மரக்கறிகள் உட்பட பழங்களின் விலைகளிலும் பாரிய மாற்றம் ஏறபட்டுள்ளது.
வறட்சியான காலநிலை காரணமாக விளைச்சல் குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் எலுமிச்சையின் விலை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோகிராம் புளி வாழை 130 ரூபாவுக்கும், ஏனைய வகை
வாழைப்பழங்கள் 150 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள்
தெரிவிக்கின்றன.