நேற்றிரவு நாட்டின் இரு வேறு பிரதேசங்களில் ரயிலில் மோதுண்டு 06 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
கல்கமுவ மற்றும் ஹபரணை பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (27) நள்ளிரவு 12 மணியளவில் கொழும்பில் இருந்து காங்கசந்துறை நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் கல்கமுவ பிரதேசத்தில் நான்கு காட்டு யானைகள் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த மீனகயா ரயிலில் ஹபரணை பலுகஸ்வெவ பிரதேசத்தில் இரண்டு காட்டு யானைகள் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒன்றரை மாதக் குட்டி யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தாய் யானை சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் கல்கமுவ மற்றும் ரிடிகல வனவிலங்கு அலுவலகங்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.