13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் -பிரசன்ன ரணதுங்க

  




13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களும் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று (01) நடாத்திய “உனக்கொரு வீடு – நாட்டிற்கு நாளை” வீடமைப்புத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளர்களுக்கான இலவசப் பத்திரம் மற்றும் வீட்டுக்கடன் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் காரணமாகவே மாகாண முதலமைச்சராக செயற்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் ஏற்கனவே நடைமுறையில் இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.