இலங்கை அரச பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான 14வது விளையாட்டு விழா, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் இம்முறை இடம்பெறுகிறது.
விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
3
வருடங்களுக்கு ஒருமுறை 16 அரச பல்கலைக்கழகங்களும் சுழற்சி முறையில் இவ்
விளையாட்டு விழாவை நடாத்தும். இம்முறை கிழக்குப் பல்கலைக்கழகம்
14வது விளையாட்டு விழாவை நடாத்துகிறது.
அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு, கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில்
இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப
தலைவர் கலந்துகொண்டதோடு, பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும் பங்கேற்றனர்.
விருந்தினர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.
போட்டியில் பங்குகொள்ளும் வீரர்கள் பிரதம அதிதிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் வரும் 16 அரச
பல்கலைக்கழகங்களில் இருந்து ஆண் மற்றும் பெண்கள் என 24 விளையாட்டுக்களில் 6
ஆயிரத்திற்கு அதிகமா வீரர்கள் பங்குகொள்கின்றனர். 01 முதல் எதிர்வரும்
8ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும்.அனைத்துப் பல்கலைக்கழக விளையாட்டு
விழாவின் ஆரம்ப நிகழ்வில், கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்
ரோகன, 231 இரானுவ படைபிரிவு கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க
அதிபர் கலாமதி பத்மராஜா, மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் என்.பி.லியனகே
மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், பேராசிரியர்கள்,
விரிவுரையாளர்கள், கல்வி சார ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.