இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது பொலிஸ் தினத்தை சிறப்பிக்கும் வகையில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பில் உள்ள வழிபாட்டு தலங்களில் இடம்பெற்றன.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157 வது பொலிஸ் தினத்தை சிறப்பிக்கும் வகையில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் மட்டக்களப்பில் உள்ள வழிபாட்டு தலங்களில் இடம்பெற்றன.

கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகணவின் தலைமையில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ எதிரிமான ஒழுங்கமைப்பில் வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்தில் பௌத்த மத தேரர்களின் பிரித் பாராயணம் மற்றும் மட்டக்களப்பு தாண்டவன்வெளி தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் ஆராதணை வழிபாடுகள் இடம்பெற்றன.

வழிபாட்டு நிகழ்வுகளில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்கள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.