கிழக்கு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா தீ மிதிப்பு வைபவம் -2023

 
























 சிவா முருகன்

 ஈழத்தில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கிழக்கு பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ  திருவிழா 2023-09.12. ம் திகதி கொடியேற்றம் ,  திருக்கதவு திறத்தலுடன் ஆரம் பமானது .
தொடர்ந்து 18 தினங்கள் நடைபெற்ற  உற்சவத்தில் 27ம் திகதி புதன் கிழமை
வனவாசம் நிகழ்வு இடம் பெற்றது . 28 ம் திகதி நள்ளிரவில் அருச்சுனன்  தவநிலை நிகழ்ச்சி பக்தர்களுக்கு நடித்து காண்பிக்கப்பட்டது .
2023.09.29.ம் திகதி  நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5-மணியவில் தீ மிதிப்பு வைபவம் இடம் பெற்றது . இந்த வைபவத்தில் கிருஷ்ணர் , பாண்டவர்கள் ,  மற்றும் தேவாதிகள் மேனியெங்கும் மஞ்சள்  பூசி  தீ மிதிப்பு வைபவத்தில்  பக்தி பரவசத்தோடு கலந்து கொண்டார்கள்
இன்று இரவு தருமருக்கு முடிசூட்டி, தீக்குளிக்கு பால்வார்க்கும் சடங்கும் இடம் பெற உள்ளது குறிப்பிட தக்கது