இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 வது பேராளர் மாநாடு, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது.
மாநாட்டில் அதிபர், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் குறிப்பாக ஆசிரியர்களின் சம்பளப்பிரச்சினை, கல்வித்துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் பொதுமக்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடி தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக, ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.