. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது ?

 


 (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 361 ரூபாவாகும்.

இதேவேளை, 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 417 ரூபாவாகும்.

லங்கா ஒயிட் டீசல் விலை 35 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 341 ரூபாவாக பதிவு செய்யப்படவுள்ளது.

லங்கா சுப்பர் டீசல் விலையும் ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 359 ரூபாவாகும்.

மேலும், மண்ணெண்ணெய் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 231 ரூபாவாக பதிவாகியுள்ளது.