மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவன் கைது .

 



இந்தியாவின், ராஜஸ்தானில் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரின் தரியாவாத்தில் கிராமவாசிகள் முன்னிலையில் தனது 20 வயது கர்ப்பிணி மனைவியை, அவரது கணவர் நிர்வாணமாக அழைத்து சென்ற விவகாரத்தில் இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த  வாரம்   இடம்பெற்றுள்ளது.
இந்த தம்பதிக்கு ஓராண்டு முன் திருமணம் நடந்துள்ளது. அந்த பெண் சமீபத்தில் வேறொரு ஆணுடன் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் கணவரின் வீட்டார் இதுபோன்ற கொடூர தண்டனையை கொடுத்ததாக தெரிகிறது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து தலைமறைவான அப்பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்தனர்.
இதனிடையே இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, பொலிஸ் ஏடிஜி தினேஷ் எம்என் கூறுகையில், “பதினைந்து நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் தனது மாமியார் வீட்டிலிருந்து இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ஷிவா என்ற மற்றொரு நபருடன் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
தரியாவாத்தின் நிச்லகோடா கிராமத்தில் வியாழன் அன்று அந்த ஆணின் இடத்திலிருந்து அந்தப் பெண்ணை மீட்ட பிறகு, அவளது கணவர், மாமியார் மற்றும் சிலர் கிராமத்தின் முன் அவளை நிர்வாணமாக அணிவகுத்துச் சென்றனர். சம்பவத்தின் போது அந்த பெண்ணை அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்” என்றார்.